சென்னை,

ளில்லா விமானம் மூலம் சென்னை வரைபடம் தயாரிக்கும் பணியை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

இதன்படி  புவி சார்  தகவல்  அமைப்பு  வரைபடம்  தயாரிக்கும்  பணியை  ஆளில்லா ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள காமிரா மூலம்   வீடியோ  பதிவாக பதிவு செய்து செய்யப்பட உள்ளது.

இதன்படி, சென்னை மாநகர் முழுவதும் சுமார் 426 சதுர கிலோமீட்டர் பரப்பு பகுதியை  ஆளில்லா ட்ரோன் காமிரா கேமரா மூலம், .வீடுகள், பூங்காக்கள், நீர்நிலைகள், ரெயில் நிலையம் போன்ற  போக்குவரத்து  நெரிசல், நிலப்பரப்பு  உள்ளிட்ட  அனைத்தும்  பதிவு செய்யப்படும்.

மேலும் இதன் மூலம் வருங்காலங்களில் நிகழக்கூடிய  புவியியல்   மாற்றங்கள் முதல்அனைத்து விவரமும் சேகரிக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்தப் பணிக்காக உலக வங்கி ரூ.4.63 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.