சென்னை:
இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வால் பெரும்பாலான கோவில்கள் இன்று இரவு நடை அடைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ இருக்கிறது.
சந்திரன்மீது பட வேண்டிய சூரியக் கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
இன்று இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்றும் என்றும் சந்திரன் பகுதியளவே மறைந்து காட்சியளிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இன்று நிகழ இருக்கிற சந்திர கிரகணத்தை சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் பார்க்கலாம்.
இதையொட்டி இன்று இரவு கோவில் நடை சாத்தப்படுவதால், திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய மாலை 4 மணி முதல் நாளை அதிகாலை 2 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் கோவில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் கோவில் நடை திறக்கப்படும் என்றும், இதன் காரணமாக சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகுதான் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் கூறியுள்ளது.