“சுவாதியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்”: சுவாதி நண்பர் முகம்மது பிலால் உருக்கம்

Must read

சென்னை:
சுவாதி  கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார், அவரது நண்பரான முகம்மது பிலால்.
இவரைத்தான் பிலால் மாலிக் என்றும், இவர்தான் சுவாதியைக் கொன்றவர் என்றும் ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட சிலர் சமூகவலைதளங்களில் எழுதிவந்தார்கள். ஆனால், சுவாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து, காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உடன் இருந்தவர் இந்த முகம்மது பிலால்.
 

சுவாதி - முகம்மது பிலால்
சுவாதி – முகம்மது பிலால்

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இவர், சுவாதி பற்றி உருக்கமான பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதில் இருந்து..
“காவல் துறையினர் எங்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு நானும், எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்தோம். கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதற்காக  காவல்துறையினருக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். சுவாதியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
சுவாதி எனக்கு நெருங்கிய தோழி. தன்னை பற்றியும், குடும்பத்தை பற்றியும்  என்னிடம் மனம்விட்டுப் பேசுவார்.  தன்னை ஒருவர் சுமார் 2 மாதமாக மாலை நேரங்களில் பின் தொடர்வதாக சுவாதி என்னிடம் கூறினார்.   ஒருமுறை தான் பயணம் செய்த ரயில் பெட்டியில் வந்து தனது அலுவலகத்தை நோட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.
சுவாதி கொல்லப்பட்ட செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். எனக்கு ஆறுதல் அளித்து கொலையாளியை கண்டு பிடிக்க உதவிடுமாறு எனது உறவினர்கள் ஆலோசனை கூறினார்கள்.
ஜூன் 24-ந்தேதி அன்று நான் சுவாதிக்கு போன் செய்தேன். ஒரு ரிங் ஆனதும் கால் கட்டாகி விட்டது. இந்த தகவலை காவல்துறையினரிட் தெரிவித்தேன்.
பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும். அவர்களை கட்டுப்படுத்த கூடாது. பெண்களுக்கு எதிராக இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த தண்டனை பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.
சுவாதி மிகவும் கலகலப்பானவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். யாரும் சோகமாக இருந்தால் அவருக்குப் பிடிக்காது. அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
சரியாண கோணத்தில் இந்த வழக்கின் விசாரணை சென்றதால் கொலையாளி விரைவில் சிக்கியுள்ளார். இதற்காக போலீஸாருக்கு நன்றி”  என்று தெரிவித்துள்ளார். முகம்மது பிலால்.

More articles

Latest article