டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள வரும் சூழலில்,  இந்தியா வரும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஆபத்தான நாடுகளின் பட்டியலை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, யுகே உள்பட 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம், விமான நிலையத்தில்  கூடுதல் நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

1, இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவில் உள்ள நாடுகள்
2. தென்னாப்பிரிக்கா
3. பிரேசில்
4. போட்ஸ்வானா
5. சீனா
6. கானா
7. மொரிஷியஸ்
8. நியூசிலாந்து
9. ஜிம்பாப்வே
10. தான்சானியா
II. ஹாங்காங்
12. இஸ்ரேல்
13. காங்கோ
14. எத்தியோப்பியா
15. கானா
16. கஜகஸ்தான்
17. கென்யா
18. நைஜீரியா
19. துனிசியா
20. ஜாம்பியா

இந்த நாடுகளில் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோயியல் சூழ்நிலையின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.