லக்னோ:

உத்தரப் பிரதேசத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி தயார் செய்துவிட்டது. தேர்தல் அறிவிப்பு வந்ததும் வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், அம்மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளோ, தோழமை கட்சியான சமாஜ்வாதி கட்சியோ இன்றும் பிள்ளையார் சுழியே போடவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் வென்றது. 34 தொகுதிகளில் இரண்டாவது இடம் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

தொகுதி பங்கீட்டின்படி, கடந்த மக்களவை தேர்தலில் 2 வது இடம் பெற்ற 11 தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியுள்ளது.

அதேபோல், கடந்த தேர்தலில் இரண்டாம் இடத்தில் வந்த 8 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஒருவர் கூறும்போது, 25 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை எங்கள் தலைவர் மாயாவதி இறுதி செய்துவிட்டார்.

மீதமுள்ள  13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் இறுதி செய்யப்படுவர். தேர்தல் அறிவிப்பு வந்ததும் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மாயாவதி வெளியிடுவார் என்றார்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து 37 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சியும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் வேலையையே இன்னும் தொடங்கவில்லை.

எனினும்,வேட்பாளர் பட்டியலை  இறுதி செய்து தேர்தல் நடவடிக்கையில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலையில் இருக்கிறது,