ஆபாசமாக சித்தரித்து கார்டூன் வரைந்த்தாக கைது செய்யப்பட்டுள்ள கார்டூனிஸ்ட் பாலாவை சந்திக்க அவரது வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 24ம் தேதி பாலா, நெல்லையில் நடைபெற்ற கந்துவட்டி கொடுமைக்கு பலியான குடும்பத்தினர் குறித்து அரசை சாடும் வகையிலான கார்ட்டூன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார், கார்டூனிஸ்ட் பாலா.
முதல்வர், ஆட்சியர், அதிகாரிகளை கடுமையாக சாடும் வகையில் அந்த கார்ட்டூன் இருந்த்து.
தம்மை அவதூறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் நேற்று காலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து நெல்லை போலீசாரால் பாலா கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தற்போது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பாலாவுக்காக வழக்கறிஞர் நெல்லை குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு சந்திக்க சென்றபோது காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோ..
https://www.youtube.com/watch?v=2D_FliWw-nc&feature=youtu.be