லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 26ம் தேதி துவங்க இருக்கிறது.

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம், ப்ரபோர்னே ஸ்டேடியம் டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் புனேவில் உள்ள எம்.சி.ஏ. இன்டர்நேஷனல் ஸ்டேடியம் ஆகிய நான்கு மைதானங்களில் 70 லீக் போட்டிகளில் நடைபெற இருக்கிறது.

மே மாதம் 29 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றுக்கு அடுத்த சுற்று தொடர்பான தேதி மற்றும் போட்டி நடைபெறும் இடம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

70 லீக் போட்டிகளை விளையாட மொத்தமுள்ள 10 அணிகளை இரண்டு குழுக்களாக பிரித்து போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம் குரூப் ஏ மற்றும் குரூப் பி-யில் இடம்பெற்றிருக்கும் அணியின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

குரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.