சென்னை:

சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகர் முழுவதும் பாய்ந்தோடும் கூவம் ஆற்றில், பெரும்பாலான  இடங்களில் சாக்கடை கள் கலக்கப்படுகிறது. அதுபோல மருத்துவக்கழிவுகளும் கூவத்தில் கொட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளின் கழிவுநீரும் ஆற்றில் கலக்கப்படுகிறது.

இதன் காரணமாக கூவம் ஆறு தற்போது கூவம் சாக்கடையாக மாறி சென்னை நகரத்தை நாற்ற மடித்து வருகிறது.

இந்நிலையில், கூவத்தில் கலக்கும் கழிவுநீரால் கடல் நீர் மாசடைவதாக வந்த செய்தியை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இன்றைய விசாரணையின்போது, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க தமிக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த  மூன்று நீர் நிலைநிலைகளும், பழைய நிலைக்கு கொண்டு வர தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தனி துறையை தமிழக அரசு  உருவாக்க வேண்டும் என்றும் கூறியது.

மேலும், இயற்கை எழில் மிகுந்த ஆறுகளை மீட்டெடுத்து பயன்பாட்டாளர்களுக்கு தர வேண்டும் என்றும், குடியிருப்புகள், நிறுவனங்களினால் ஏற்படும் கழிவுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும்,  நகரில் வெளியாகும் கழிவுநீர்களை  மறுசுழற்சி செய்து வேளாண் துறைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு கூறியது.

இந்த வழக்கில் வரும் 30ந்தேதிக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.