சென்னை,

டந்த மாதம் 18ந்தேதி நடைபெற்ற எடப்பாடி தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பு குறித்த சிடியை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சட்டசபை அமளி காரணமாக எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, எடப்பாடி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதை  ரத்து செய்யக்கோரியும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதற்கு பதிலளித்த சட்டசபை செயலாளர், சட்டமன்றத்தில்  ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடமில்லை என்றார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு காட்சிப் பதிவையும் சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து இந்த வீடியோ பதிவு அடங்கிய சி.டி.யை மு.க.ஸ்டாலினுக்க  வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை மு.க.ஸ்டாலினுக்கு, வாக்கெடுப்பு வீடியோ அடங்கிய சிடி வழங்கப்படும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் கூறினார்.