சென்னை:

அ.தி.மு.க. (சசிகலா அணி) துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நீண்டகாலமாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழங்களின் காரணமாக, சசிகலா குடும்பத்தினைரை முடக்கி வைக்க ஏதுவாக,   பெரா வழக்குகளை 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூசி தட்டி எடுத்து, விசாரணையை முடுக்கி விட்டுள்ளது மத்திய அரசு.

இந்த வழக்குகள் அனைத்தும், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீண்ட காலமாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டும் பதிவானது. கோடநாடு எஸ்டேட் பங்குகளை போலி நிறுவனம் மூலமாக வாங்கிய தாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. .

தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துவந்த தினகரன், விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த நிலையில், இது குறித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், எழும்பூர் பொருளதார குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் அமலாக்கத்துரை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.