கடலூர்:

டலூரில் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,  தெரியாமல் பாத்ரூமுக்குள் நூழைந்ததால், அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்மணி அலறினார். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அங்கு அம்பேத்கர் நகர் பகுதியில் தூய்மை பணிகள் ஆய்வு மேற்கொண்டபோது  திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரின் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையும் மீறி செம்மண்டலம், கம்பியம்பேட்டை வழியாக கடலூர் பேருந்து நிலையத்திற்கு சென்று  ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு வண்டிப்பாளையம் பகுதிக்கு சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு கீற்று மறைப்பில் இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இதையறியாத ஆளுநர் கீற்று மறைப்புக்குள் நுழைந்து அங்கு ஆய்வு செய்ய முற்பட்டார்.

குளிக்கும் இடத்தில் ஆளுநரை எதிர்பார்க்காத அந்த பெண்மணி, அதிர்ச்சியில் அலறினார். அக்கம் பக்கம் இருந்த மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநரை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.