புதுடெல்லி:
சி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், ‛மோடி அரசு, தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாக,’ விமர்சித்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான உலகலாவிய பசி மிகுந்த நாடுகளின் பட்டியல் நேற்று வெளியானது. குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையில் வெளியான பட்டியலில், பசி மிகுந்த 107 நாடுகளில் இந்தியா, 94வது இடத்தில் உள்ளது. இதில் நேபாளம் 73வது இடத்திலும், வங்கதேசம் 75வது இடத்திலும், பாகிஸ்தான் 88வது இடத்திலும் உள்ளன. இந்த நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது குறித்து காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ராகுல் தனது டுவிட்டரில் பதிவில், ‛இந்தியாவின் ஏழை மக்கள் பசியால் வாடுகின்றனர். ஏனெனில் தமது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது,’ எனப் பதிவிட்டுள்ளார்.