புதுடெல்லி: கடந்த ஒன்றரை மாத காலத்தில், இந்தியாவில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 8 லட்சத்திற்கு கீழே இறங்கியுள்ளது.
இந்த கணக்கு மொத்த எண்ணிக்கையில் 10.70% ஆகும். தற்போதைய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 795087 ஆகும்.
கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவருவோரின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் 1ம் தேதிதான் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. அதேசமயம், கொரோனாவிலிருந்து குணமாவோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருப்பதால், சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6524595 ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 70816 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் அதேகாலத்தில் மொத்தம் 62212 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.