சென்னை:

மிழகத்தில்  படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமாரி கூறினார்.

இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, அவரிடம் நெல்லையில் பிளஸ்2 மாணவர் ஒருவர் தந்தயின் குடிப்பழக்கம் காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குபதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், எந்தவொரு  பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கூறிய அமைச்சர்,  குடிகாரனா பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்று தத்துவம் பேசினார்.

பூரண மதுவிலக்கு என்பதே அரசின் கொள்கை என்ற அமைச்சர்,  இது ஒரு சமூக பிரச்சினை, குடிப்பவர்களே திருந்த வேண்டும்; தற்கொலை தீர்வாகாது என்றும், டாஸ்மாக் இல்லாவிட்டால் கள்ளச்சாராய சாவு அதிகரித்து விடும் என்றும்,. பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள்  மது வருவதை தடுக்கவே டாஸ்மாக் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.