சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு மேலும், ரூ 880 குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.320 மட்டுமே குறைந்த நிலையில், இன்று மேலும் அதிகமாக குறைந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த மாதம் (செப்டம்பர் 30) இறுதியில் ரூ.60ஆயிரத்தை நெருங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்கு பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று சரவனுக்கு ரூ.320 குறைந்து, ஒருசரவன் விலை ரூ.57 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில், இன்றும் சரவனுக்கு ரூ.800 குறைந்துள்ளது- இன்றைய விலை சரவன் தங்கம் ரூ.56 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது. ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே சென்றது. சவரன் தங்கம் விலை ரூ.60ஆயிரத்தை நெருங்கியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தங்கத்தின் வரலாறு காணாத விலை உயர்வுக்க, இஸ்ரேல் – காசா போர், இஸ்ரேல் – ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் என கூறப்பட்டது. மேலும், தங்கத்தின் விலை சரவன் ரூ.1 லட்சம் வரை உயரும் என பொருளாதார நிபுணர்களும் பூச்சாண்டி காட்டினர். இதனால், சாமானிய மக்கள் செய்வதறியாது தவித்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக, அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ 2720 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்று மேலும் ரூ.880 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (நவம்பர் 14 ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 880 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
” வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை ரூ 56 ஆயிரத்திற்கு கீழும் வெள்ளியின் விலை ரூ 100க்கு கீழும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதால் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது.
கடந்த 9 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,200க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 7,275 ரூபாய்க்கு விற்பனையானது. நவம்பர் 10ந்தேதியும் அதே விலையில் நீடித்தது, தங்கத்தின் விலை ரூ.58,200 ஆக விற்பனையானது.
நவம்பர் 11ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும், ரூ.440 குறைந்து காணப்பட்டது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம்ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையானது.
இதன் தொடர்ச்சியாக நவம்பர் 12ந்தேதி சரவனுக்கு ரூ.1080 குறைந்தது. கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 85-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 13ந்தேதி அன்று சவரனுக்க ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று மேலும் சவரனுக்கு ரூ.880 குறைந்து சவரன் ரூ 55,480 க்கு விற்பனையாகி வருகிறது.