சென்னை:
சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா இன்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா, மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்றதற்காகவும், காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றதற்காகவும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.