டில்லி:

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில்,  ஜூன் 16-ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருப்பதாக நாடாளுமனற் விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ள நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  வரும் 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக இடைக்கால சபாநாயகரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, சபாநாகர் தேர்தல் மற்றும் குடியரசு தலைவர் உரை  மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி, ஜூன் 16-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார். அன்றைய தினம் மாலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற உள்ளது.