சென்னை: 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் இன்று (ஜூன் 21)  காலை 10:00 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமபந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கத்தில் கூட உள்ளது. இன்றைய முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கொரோனா தொற்று காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும். அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அதனை சபாநாயகர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து கூறுவார். கவர்னர் உரையுடன் இன்றைய கூட்டம் நிறைவடையும்.

அதன்பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு எத்தனை நாட்கள் அனுமதிப்பது? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இதனை சபாநாயகர் முறைப்படி அறிவிப்பு வெளியிடுவார்.

முன்னதாக கலைவாணர் அரங்கத்தை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு,  ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. பேரவையில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என கூறினார்.

சபையை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டு, கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா நெகடிவ் சர்டிபிகேட் உள்ள எம்எல்ஏக்கள் மட்டுமே இன்றைய கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இந்த மாத இறுதியில், அதாவது 22-ந்தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை கூட்டம் 3 அல்லது 4 நாட்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.