நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக இருந்தவர் என்று ஏ.வி.எம். நிறுவனம் புகழாரம் சூட்டியுள்ளது.

விஜயகாந்த் மறைவு குறித்து ஏ.வி.எம். நிறுவனம் வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில் :

“கேப்டன் விஜயகாந்தின் இழப்பு ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாகும்.

நம்பமுடியாத அடக்கமான மற்றும் அன்பான மனிதராக விஜயகாந்த் எங்கள் மனதில் என்றும் நிறைந்திருக்கிறார்.

திரைப்பட வெளியீட்டு சவால்களை எதிர்கொள்ளும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவது வரை அவரது பெருந்தன்மை மற்றும் கருணை, அவரது தன்னலமற்ற தன்மையை வெளிப்படுத்தியது.

ஸ்பாட் பாய்ஸ் முதல் டைரக்டர்கள் வரை அனைவரிடமும் சமமான கருணையுடன் பழகும் விஜயகாந்த் சாரின் எப்பொழுதும் சிரிக்கும் குணம் அனைவரையும் கவர்ந்தது.

தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த முன்மாதிரி மனிதனின் பிரிவிற்கு ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் இரங்கல் தெரிவிக்கிறது.

சிவப்பு மல்லி, தர்ம தேவதை, மாநகர காவல், சேதுபதி ஐ.பி.எஸ் ஆகிய படங்களில் அவருடனான இனிமையான நினைவுகள். என்றென்றும் போற்றப்படும்” என்று தெரிவித்துள்ளது.