முழு கற்பனையில் நடக்கவே செய்யாத அல்லது நடக்கவே முடியாத “சம்பவங்களை” திரைப்படமாக்குவது ஒரு புறம். அதே நேரம் அத்தி பூத்தாற்போல சமுதாய அக்கறையுடன் உண்மைக்கு வெகு அருகில் வந்து நம்மையே படம் பிடித்துக் காட்டுவது மறு புறம்.
அறம் உட்பட அப்படிப்பட்ட படங்கள் சமீபத்தில் சில வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவரத் தயாராக இருக்கும் திரைப்படம் சுரேஷ்காமாட்சி இயக்கியுள்ள “மிக மிக அவசரம்” திரைப்படம்.
வெளியில் இருந்து பார்க்கும்போது காக்கி உடை கம்பீரம்தான். ஆனால் அந்த கம்பீரத்துக்குள் கீழ்மட்ட காவலர்கள் அடக்கி வைத்திருக்கும் வேதனைகள் எண்ணற்றவை. அதுவும் பெண் காவலராக இருந்தால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இன்னும் அதிகம்.
உயர் அதிகாரிகள் சிலர் தரும் டார்ச்சரால், கீழ்மட்ட காவலர்கல் படும்பாடு சொல்லி மாளாது.
ஒரு பெண் காவலருக்கு உயர் அதிகாரியின் கொடுத்த செக்ஸ் டார்ச்ர் ஆடியோ பதிவு அனைவரும் அறிந்ததே.
இது குறித்து மனதில் படும்படி பேசும் படம்தான், “மிக மிக அவசரம்”.
பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறை ஜாம்பவான்கள், படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இதோ போன்ற சம்பவம் நிஜத்தில் நடந்திருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த காவல் பெண் ஆய்வாளர் ஒருவர், பணி சுமை காரணமாக தற்கொலை முடிவெடுத்து அதை வாட்ஸ் ஆப்பில் பதிவிட, அப்பெண் ஆய்வாளரை காப்பாற்றியிருக்கிறது காவல்துறை.
அந்த அதிகாரிக்கு இப்போது கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மிகமிக அவசரம் படம் திரைக்கு வந்து சேர்வதற்குள் அப்படத்தின் கருத்துக்கு வலு சேர்க்கும் நிகழ்வுகள், இன்னும் எத்தனை எத்தனை நடக்குமோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
“படம் வரட்டும். இந்தப் பிரச்சினை அனைவரின் கவனத்துக்கும் வரும். நிச்சயம் தீர்வு கிடைக்கும்” என்கிறார் இயக்குநர் சுரேஷ்காமாட்சி.
நல்லதே நடக்கட்டும்!