சென்னை: கல்லறை தோட்டத்தில், மயங்கி கிடந்தவரை, இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்ட நபரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவல்து பெண் ஆய்வாளரின் செயல் வெகுவாக  பாராட்டப்பட்டு வருகிறது.

சென்னை டி.பி.சத்திரம் கல்லறை தோட்டத்தில் ஒருவர் மயங்கி கிடந்தார். அருகே உள்ள மரம் முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு காவலர்களுக்கு விரைந்து வந்த அண்ணா நகர் காவல் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இறந்து விட்டதாக கருதப்பட்ட இளைஞரை தோளில் தூக்கிச் சென்று தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தார். இதனால், அந்த நபர் உயிர்பிழைத்தார்

ஆய்வாளர் அதிரடியாக செயல்பட்டு, மயங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை தோளில் தூக்கி, சாலையில் சென்ற ஆட்டோவை வழிமறித்து, அந்த நபரை தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.