sc_10
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு உடனடியாக உதவிடும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.
வறட்சி பாதித்த மாநிலங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை அளிக்க  வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வறட்சி பாதித்த மாநிலங்களில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில்  கூறப்பட்டிருந்தது. .
இந்த வழக்கு நீதிபதி லோக்கூர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வறட்சி பாதித்த மாநிலங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேசிய பேரிடர் மேலாண்மை நிதியை உருவாக்க வேண்டும்,  வேளாண் துறை சார்பில் ஒரு வாரத்திற்குள் வறட்சி பாதித்த மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரை, வறட்சியை பாதித்த மாநிலங்களில் பணியாற்றிடும் அளவுக்கு பயிற்சி அளிக்கவு வேண்டும் என்றும் கூறினர்.