சென்னை:

மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் காரணமாக பணபரிவர்த்தனையில் விலக்கப்பட்டிருந்த கட்டணங்கள் இன்றுமுதல் மீண்டும் விதிக்கப்படுகின்றன.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூ.1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து ஏடிஎம் மையங்களிலும், வங்கிகளிலும் பணபரிவர்த்தனைகளில்

விதிக்கப்பட்டிருந்த கட்டணம் விலக்கப்பட்டது. கணக்கு வைத்திருக்கும் வங்கி மட்டுமல்லாது பிற வங்கிகளிலும் கட்டணம் பிடித்தமின்றி பணம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. இது பிப்ரவரி மாதம் வரை நீடித்தது. அந்தச் சலுகை மார்ச் முதல்நாளான இன்றிலிருந்து மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வந்துள்ளது. ஹெச்டிஎப் சி வங்கிகளில் மாதமொன்றுக்கு ரூ. 2 லட்சம் வரை எந்தக் கட்டணம் இல்லாமல் பணத்தை எடுக்கலாம், முதலீடு
செய்யலாம் என்றும் அதற்கு மேல் என்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஹெச்டி எப் சி வங்கி அல்லாத பிற ங்கிகளில் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரை எடுக்கலாம்
என்றும் அதற்கு மேல் என்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதேபோல் ஐசிஐசிஐ வங்கியில் 4 முறை பணபரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை என்றும் ஐந்தாவது
பணபரிவர்த்தனையிலிருந்து கட்டணம் எனவும் கூறியுள்ளது. அதாவது ஐந்தாவது பணபரிவர்த்தனையிலிருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 அல்லது ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து ரூபாய் என்ற வீதத்தில்

கட்டணம் விதிக்கப்படும் என்று அந்த வங்கி அறிவித்துள்ளது. இதேபோன்று ஆக்ஸிஸ் வங்கியின் அறிக்கையில் , முதல் 5 பணபரிவர்த்தனை அல்லது ரூ 10 லட்சம் வரை கட்டணம் கிடையாது என்றும்
அதற்கு மேல் கட்டணம்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.