சென்னை,

மிழகத்தில் முட்டையின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சத்துணவில் வழங்கப்பட்டு வரும் முட்டை நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அமைச்சர் முட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது,

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழகத்தில் சத்துணவு திட்டம் மேலும் மெருகேற்றப்படும் என்றார். மேலும், முட்டை விலை உயர்வு காரணமாக சத்துணவு திட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் முட்டை நிறுத்தப்படாது என்றும், முட்டை விலை மட்டுமல்ல என்ன பொருட்களின் விலை உயர்ந்தாலும்,  அனைவராலும்’ பாரட்டப்படுகிற சத்துணவு திட்டம் தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

[youtube-feed feed=1]