டெல்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வேற்று வங்கியின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். அதில், இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது என்றும், ஆனால், எந்த அளவிலான பாதிப்பு என்பதை துல்லியமாக கூற முடியாது.
ஆரம்பகட்டத்தில் அறிவிக்கப்பட்ட முதல் மற்றும் 2வது கட்ட லாக்டவுன் காலங்களில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை கொண்டு, தற்போது பொருளாதார சரிவை கணித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, முதல்கட்ட ஊரடங்கால், மக்கள் வீடுகளில் முடங்கியதால் தொழிலாளர்கள் வேளைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அத்தியாவசியமற்ற பொருட்களின் தயாரிப்பு, நுகர்வு, வருவாய் ஆகியவை குறைந்தன.
2வது கட்ட லாக்டவுனின்போது, அரசின் செலவினங்கள் மட்டுமின்றி நோய் தொற்றும் அதிகரித்ததால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவைக் கண்டது.
நடப்பாண்டில் ஆகஸ்டு பிற்பாதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 12 சதவீதமாக வீழ்ச்சி காணும் என மதிப்பிடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 2ம் கட்ட ஊரடங்கில் ஏப்ரல் முதல் ஜூன் வரை பொருளாதார நடவடிக்கைகள் சுணக்கம் கண்டு, பின் சுதாரிக்கத் துவங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி – மார்ச் காலங்களில் பொருளாதாரம் பின்னடைவில் இருந்து மீண்டு முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.