சென்னை: அனைத்து சமூகங்களையும், பிரிவினரையும், மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’ என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வளரவேண்டும் என்பதே எனது ஆசை என பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வராக பதவி ஏற்றதும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக, பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்கினார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக ரகுராம் ராஜன், உறுப்பினர்களாக எஸ்தர் டஃப்லோ (நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்), அரவிந்த் சுப்பிரமணியன் (ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்), ஜீன் ட்ரெஸ் (ராஞ்சி பல்கலைக்கழகம், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்), டாக்டர் எஸ் நாராயண் (முன்னாள் நிதித்துறை செயலாளர்)  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின்  முதல் ஆலோசனை கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்  காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  குழுவின் உறுப்பினர்களான எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் செயலர் கிருஷ்ணன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,  முதல்வர் என்பது ஸ்டாலின் மட்டுமல்ல. அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட மடல் என்பது அனைத்து சமூகங்களையும், மாவட்டங்களையும், பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான். தமிழ்நாடு அரசு 55 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.

தமிழ்நாட்டில் நிதி ஆதாரம் விரல்விட்டு எண்ணத்தக்க சில துறைகள் மூலமாக மட்டுமே வருவதாகவும், வரி வசூலில் இருந்த மாநில உரிமைகள் மத்திய அரசு ஜிஎஸ்டி மூலமாகப் அழித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. அது சமூக வளர்ச்சியாகவும்  இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய  ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்.

திமுக சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் தான் நிற்கும் என்றும், வளர்ச்சியும் அதன் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். மேலும் தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

அனைத்து சமூகங்களையும், பிரிவினரையும், மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’ என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வளரவேண்டும் என்பதே எனது ஆசை என பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.