மதுரை: மதுரை அருகே உள்ள சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அகு பணிக்கு வராத டாக்டரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.
அரசு முறை பயணமாக இன்று மதுரை சென்றுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மதுரை, வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தவர், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.