சென்னை:

ஜூலை 1ந்தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில்  வழியாக குருவாயூர் செல்லும் விரைவு ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது காலை 8.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், ஜூலை 1ந்தேதி முதல் (திங்கட்கிழமை) 8.25 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல  சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இனி 7.50 மணிக்கே முன்கூட்டி  புறப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ், இனி 10.55 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது