சென்னை: நாளை கரையை கடக்கும் புயலால், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கனத்த மழையுடன் கூடிய சூறவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் இய்றகை புயலாக வலுப்பெறுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கனத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று காலை 10மணி அளவில் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கை தகவலில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை வரை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாகவும், இது நாகையில் இருந்து 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 360 கி.மீ தொலைவிலும், சென்னையின் தென்கிழக்கே 400 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இது இன்னும் 3 மணி நேரத்தில் தற்காலிக புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இதன்மூலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும், வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை, அதாவது காரைக்கால் மகாபலிபுரம் இடையே நாளை (30ந்தேதி) கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த புயல் கரையை கடக்கும்போது கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 70 முதல் 80 மீட்டர் வேகத்தில் காற்று வீசும், அதிகபட்சமாக 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளார்.
நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும். ஃபெங்கல் புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை திருச்சியில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலையாக உள்ளது, மேலும் இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் பெங்கால் புயல் தீவிரமடைந்து, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இந்திய கடற்படை விரிவான பேரிடர் மீட்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் சிக்கல்கள் உள்ளன. இது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை பெரும்பாலும் பாதிக்கும்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர, மீன்பிடி படகுகள் துறைமுகத்திற்குத் திரும்புவதற்கு அதன் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் ஆலோசனைகளை வழங்கியதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.