குடகு:

குடகு மலைப் பகுதியில் விவசாய நிலத்தை வர்த்தகப் பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதிக்கக் கோரி வந்த 693 விண்ணப்பங்களை கர்நாடக அரசு நிராகரித்துள்ளது.

 

குடகு மலையில் விவசாய நிலங்களை வர்த்தகப் பயன்பாட்டுக்கு மாற்றி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதன்பிறகு குடகு மாவட்ட அதிகாரிகள் விழித்துக் கொண்டனர். காடுகளை அழிப்பதையும், விவசாய நிலங்களை வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கும் தடை விதித்தனர்.

கடந்த 5 மாதங்களில், விவசாய நிலத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி கேட்டு வந்த 693 விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது. நிலத்தைப் பயன்படுத்துவது குறித்து மாநில அரசு கட்டுப்பாட்டுகளுடன் கூடிய வழிகாட்டுதலை வெளியிட்ட பின்னரே, இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும் என விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு 85 இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்ட இடங்களை இந்திய புவியியல் சர்வே உட்பட பல்வேறு ஏஜென்சிகள் பார்வையிட்டனர்.

அதன்பிறகு, காடுகளில் விவசாய நிலத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி கிடையாது என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குடகு மலையில் 2,800 ஏக்கர் பரப்பளவில் இருந்த காபி பயிர் மற்றும் பயிர் நிலம் வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவே, கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நிலச் சரிவு ஏற்பட காரணமாக அமைந்தது.  விவசாய நிலத்தை வர்த்த பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி மறுக்கப்பட்டதை, சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

குடகு பகுதி விரைந்து நகர்ப்புறமாக மாறி வருவதை நாம் விரைந்து தடுக்க வேண்டும். விவசாய நிலத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வர்த்தக பயன்பாட்டுக்கு நிலத்தைப் மாற்றுவதை கர்னல் செப்புதிரா முத்தண்ணா கடுமையாக எதிர்த்துள்ளார்.

எனினும்,  தனி வீடுகள் கட்டிக் கொள்ள விவசாய நிலத்தை மாற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளதாக குடகு நகராட்சி துணை ஆணையர் அன்னீஷ் கண்மணி தெரிவித்தார்.