சென்னை:

மிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பகலில்  கடுமையான வெப்பமும், இரவில் அந்த வெப்பத்தின் தாக்கம் வெளிப்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் கடுமையான வெப்பம் கொளுத்தும் நிலையில், வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல முக்கிய நகரங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து  வரும் நிலையில், அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகரிக்கும் என  எச்சரிக்கை விடுத்துள்ளது.

\இதனிடையே, தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

அதேநேரத்தில் சேலம், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், ராசிபுரம், தருமபுரி, போச்சம்பள்ளி ஆகிய இடங்களில் மழை பெய்தது.

ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.