எம். ஜி. ஆர். ஆரம்பித்து, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ. தி. மு. க., உண்மையில் அடித்தட்டு மக்கள் நிறைந்த இயக்கம்!
இது ஜெ. வின் இறுதிக் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவு இழந்தே வந்தது!
அவரது மறைவுக்குப் பிறகு, அக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது! இருந்தாலும், “எதிர்காலப் பிழைப்பை” எண்ணி உஷாராக அப்பூசல் முற்றுப் பெற்றது!
இச்சூழலில், சசிகலா சிறை மீண்ட பிறகு மீண்டும் மிகப் பெரிய சர்ச்சை வெடித்து இருக்கிறது!
“அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது! ” என்று , அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடியும், ” சேர்த்துக் கொள்வது பற்றி ஆலோசிக்கலாம்”என்று “தர்ம யுத்தம்” ஓ. பி. எஸ்சும் கச்சை கட்டுகிறார்கள்!
இரு புறமும் அனல் பறக்கும் வாத… எதிர்வாதங்கள்! இதைக் கவனிக்கும் ஒரு பள்ளிச் சிறுவன் , தனக்குப் பிடித்த ” Humpty.. Dumpty. ” என்ற புகழ் பெற்ற நர்சரி பாடலைப் பாடுகிறான்!
அ. தி. மு. க. வின் இன்றைய நிலையும் இந்தப் பாடலுக்கு அப்படியே பொருந்துகிறதே!
— ஓவியர் இரா. பாரி.