சென்னை:

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த நீதிபதி கூறிய கருத்தை வாபஸ் பெற, நீதிபதியை வற்புறுத்தியது தொடர்பாக, 23 வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த பேராசிரியர் மீது  மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, கிறிஸ்தவ மிஷனரிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தார்.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால்…  அது மில்லியன் டாலர் கேள்வி  என்றும், பெண் மாணவிகளின்  பெற்றோர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களில் இணை கல்வி படிப்பை மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்,  கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும், கிறிஸ்துவ கல்வி நிறுவனங் களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 23 வழக்கறிஞர் கள் சம்பந்தப்பட்ட கருத்தை தெரிவித்த நீதிபதியிடம் சென்று முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்பாக தான் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதாக உயர்நீதி மன்ற நிதிபதி அறிவித்தார்.

இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப் பட்டது.

இந்த நிலையில், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்தை நீக்க கோரிய விவகாரத்தில் 23 வழக்கறிஞர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு புகார் கூறப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசுத்தலைமை வழக்கறிஞ்ரிடம் 4 வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.

மூத்த வழக்கறிஞர் வைகை உட்பட 23 வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.