
கோல்கட்டா:
அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்தியா சென் பற்றிய ஆவணப்படம் ‛தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தணிக்கை துறை அதிகாரிகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆவணபடத்தில் இடம்பெற்றிருக்கும் பசுமாடு, இந்துத்துவா, குஜராத் ஆகிய வசனங்களை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்று அளிக்க முடியும் என்று தெரிவித்தனர். இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமர்த்தியா சென், “ தணிக்கைத் துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றது. அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கி இருக்கிறது. ஆளும் கட்சி தனக்கு எது சிறந்தது, சரியானது என்று நினைக்கிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது” என்று குற்றம்சாடடியுள்ளார்.
[youtube-feed feed=1]