ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படம் தர்பார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ரஜியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2017ம் ஆண்டு அர்னால்டு நடிப்பில் வெளியான Killing Gunther என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரு சில மாற்றங்கள் செய்து வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இது குறித்து தர்பார் படத்தின் போஸ்டர் டிசைனர் வின்சிராஜ் கூறுகையில், Killing Gunther படத்தின் போஸ்டரை இப்போது தான் , தான் பார்ப்பதாகவும் , இப்படத்தின் போஸ்டரையும், தர்பார் படத்தின் போஸ்டரையும் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு வருத்தத்தை தருகிறது என்றும் கூறியுள்ளார்.