ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழ இருந்த பயணியின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனர் தனது 25வது அறிவை பயன்படுத்தியதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவாகி இருந்த இந்த காட்சி 19 வினாடிகள் மட்டுமே வெளியாகி பதைபதைக்க வைக்கும் ஒரு திரில்லர் படத்துக்கு நிகராக பேசப்பட்டு வருகிறது.

பேருந்தில் ஏறிய ஒரு இளைஞர் காலியாக இருந்த அந்த பஸ்சுக்குள் செல்லாமல் நடத்துனர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அந்த பயணியின் அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு பயணிக்கு டிக்கெட் கொண்டிருந்த நடத்துனர், அந்த பேருந்தின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதை அடுத்து வாயில் அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர் விழப்போவதை உணர்ந்து டிக்கெட் கொடுப்பதை நிறுத்திவிட்டு தனது ஒரு கரத்தால் அந்த வாலிபரை காப்பாற்றினார்.

நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து ஸ்பைடர்மேன் ரேஞ்சுக்கு அந்த நடத்துனர் புகழ் பெற்றுள்ளதோடு அவரது சமயோசிதம் 25வது அறிவுக்கு நிகரானது என்று புகழப்பட்ட வருகிறது.