சென்னை:
தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திறப்பது குறித்து வரும் 15-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று கூறினார்.