சென்னை:
நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை மக்கள் நாவலர் நெடுஞ்செழியன் என அழைக்கின்றனர். அவருக்கு இன்றுடன் 100 வயது நிறைவடைகிறது. தமிழக அரசு சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் ஒரு சிலை அமைத்துள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் மு க் ஸ்டாலின் அந்த சிலையைத் திறந்து வைத்தார்.