சென்னை,

மீபத்தில் கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூட உத்தரவிட்ட மத்திய அரசு தொடர்ந்து,  ஆவடியில் உள்ள ராணுவ சீருடை ஆலையை மூடவும் முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசின் தொடர் அநீதியான போக்கு தமிழர்களிடையே பெரும் அச்சத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கி வருகிறது.

சென்னை  ஆவடியில் 56 ஆண்டுகளாக ராணுவ சீருடை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 2200 பேர் வேலை செய்து வருகின்றனர். இங்கிருந்து, ராணுவத்தினருக்கான சீருடைகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசியல் கட்சியினரும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு முயற்சித்து வருகிறது. சேலத்தில் உள்ள எவர்சில்வர் ஆலை, கோவையில் உள்ள அச்சகம், தற்போது ஆவடியில் உள்ள சீருடை தயாரிப்பு நிறுவனம்.

அதுபோல, தமிழகத்துக்கு எதிரான போக்கை மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நீட் தேர்வு போன்ற கல்வியில் மாற்றம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது,   தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் வேறோடு அழிக்கும் வகையில், விவசாய பூமியான டெல்டா நிலங்களை குறி வைத்து மீத்தேன், ஓஎன்ஜிசி போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் தொடர் தமிழின விரோத போக்கு தமிழர்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.