டில்லி.
நாளை முதல் (ஜனவரி 1) ஏடிஎம் இயந்திரங்களில் இரு ஒரே நேரத்தில் 4500 வரை பணம் எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
பணமதிப்பு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு வங்கிகளில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும்; ஏ.டி.எம்.,களிலிருந்து, ஒரு நாளில், அதிகபட்சம் 2,000 ரூபாயும் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது
கடந்த 50 நாட்களாக ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டுமே எடுக்க முடிந்தது. நாளை முதல் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.
நாளை முதல் ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனையடுத்து ரூ.2,500 ஆக இருந்த வரம்பு ரூ.4,500 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.