டில்லி,
ணம் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி அறிவியுங்கள் என்று பிரதமர்  மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் 8ந்தேதி இரவு பழைய ரூ.500, 1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 50 நாட்களில் பணப்பிரச்சினைகள் சரியாகி விடும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
அவர் கூறிய 50 நாட்கள் கெடு நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில், பணப்பற்றாக்குறை குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி வாராவாரம் ‘மான் கி பாத்’  என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஆனால், தற்போது நாட்டில் உள்ள பணப்பிரச்சினை காரணமாக பிரதமர் தனது உரையை  நாளையோ (இன்றோ) அல்லது இன்னொரு நாளோ நாட்டு மக்களுக்கு உரை ஆற்றலாம் என்றார்.
மேலும், மோடியின் உரையில், பணம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி ஒரு ஆணித்தரமான அறிவிப்பை வெளியிட வேண்டும். இதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என கூறினார்.
மேலும், “ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பான அனைத்து துயரங்களும் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஜனவரி 2-ந் தேதி திங்கட்கிழமை முதல்,  நவம்பர் 8-ந் தேதி விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட வேண்டும், மக்கள் தங்களது வங்கிக்கணக்குகளில் இருந்து (தேவையான அளவு) பணம் எடுக்கும் நிலை வர வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு” என்றும் கூறினார்.