சென்னை,

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை முற்றிலும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசை தி..க. தலைவர்  கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையினால் பலியான குடும்பத்தினர்பற்றி, கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வரைந்த கார்ட்டூனிஸ்ட்  பாலா மீது, தமிழக அரசு கைது நடவடிக்கை எடுத்த்து வன்மையான கண்டனத்திற்குரியது.

நமது அரசியல் சட்டத்தின் பறிக்கப்பட முடியாத, ஏன் மாற்றப்பட முடியாத அடிக்கட்டுமானத்தின் பகுதி – பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என்பவையாகும்.

இம் என்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்  என்பது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.

எனவே அதிகாரப் போதையினால் தள்ளாடுவோர் – இதனை மறுபரிசீலனை செய்து,  கார்ட்டூனிஸ்ட்  பாலா  மீதான  வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.