டில்லி,
வுதியில் 150 இந்தியர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
சவுதி அரேபியாவின் உள்ள  பல்வேறு மருத்துவமனைளின் பிணவறைகளில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வேலைக்கு சென்று, அங்கேயே இறந்தவர்கள் 150 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இது அதிர்ச்சிகரமாக இருந்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது.
இதற்கு பதில் அளித்து இந்திய  வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது,
சவூதியில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வேலை பார்த்து வருவதாகவும்.  இதனால் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 பேர் வரை இயற்கையாகவே மரணம் அடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இறந்தவர்களின் உடல்கள்,  வழக்கமாக அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்து  இந்தியா கொண்டுவர குறைந்தது 3 வாரங்கள் ஆவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்கொலை, கொலை, பணி சார்ந்த விபத்து போன்ற  ஆகிய எதிர்பாரா மரணங்கள் நிகழும் போது, விசாரணை நிறைவடைந்த பின்னரே உடல்களை இந்தியா  கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்,  ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் 10 உடல்கள் மட்டுமே சவுதியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.