2014-ல் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனந்தி. அதே வருடத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி,கதிர் ஹீரோவாக நடிக்கும் படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு இரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது . வாரங்கல்லில் பிரபல தொழிலதிபரும்,அக்னி சிறகுகள் படத்தின் இணை இயக்குனருமான சாக்ரடீஸ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கயல் ஆனந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அத்தியாயத்தின் துவக்கம் என தனது திருமண புகைப்பதை பதிவிட்டுள்ளார் .

https://twitter.com/anandhiactress/status/1347951700611538944