திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வருடாந்திர  ஆவணித்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது.  விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. அதன்படி நடப்பாண்டுக்கான ஆவணித் திருவிழா கொடியேற்றம் இன்று காலை 5 மணி முதல் 5.30க்குள் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை  1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவணித் திருவிழா நிகழ்ச்சிகளை  பக்தர்கள் வசதிக்காக https://youtu.be/MjiiXtXHNVI என்ற யூ டியூப் முகவரியில் நேரடியாக பார்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.