சென்னை:

ற்போதைய அதிமுக அரசு அதிகார பலத்துடன் செயல்படுவதாகவும்,  சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் காங். சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை எம்எல்ஏ சரவணனுக்கு சசிகலா தரப்பினர், எடப்பாடி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க பண பேரம் நடைபெற்றதாக வெளியதான வீடியோவை தொடர்ந்து, இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டதால் திமுகவினர் ‘MLA For Sale’ என்ற பதாதைகளுடன் சபைக்குள் முழக்கமிட்டனர்.

இதன் காரணமாக அவர்கள் சபையைவிட்டு வெளியேற்றப்பட்டனர். திமுக வெளியேற்றப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சியினரும் சபையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, அதிமுக அரசு அதிகார பலத்துடன் இருப்பதால், சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன்  காங். சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து, திமுகவினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.