டில்லி:
உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் நேற்று கொல்லப்பட்டார். இது குறித்த செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம்.
சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கான்பூரை சேர்ந்த நவீன் ஸ்ரீவஸ்தவா ஆவார். இவர் உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தவர்.
பில்ஹாவூர் பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் பணி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அவரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுட்டுகொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்கள்.
இந்த கொலை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது.
அக்டோபர் 21-ம் தேதி உ.பி. மாநிலம் காசிப்பூர் பகுதியில் ராஜேஷ் மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செப்டம்பர் 5-ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கவுரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செப்டம்பர் 20-ம் தேதி திரிபுராவின் மேற்கு மாவட்டத்தில் மாண்டி பகுதியில் பழங்குடியினர் பகுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற சாந்தனு பவுமிக் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்.
நவ. 22-ம் தேதி திரிபுராவில் சைதன் பத்திரிகா என்ற பத்திரிகையாளர் சுதீப் தத்தா, திரிபுரா மக்கள் முன்னணி என்ற அமைப்பினர் நடத்திய போராட்டத்தினை செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் நேற்று ( நவ.30) கான்பூரில் நவீன் ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருக்கறார்.