ருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாவிட்டால் போலீசார் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையாளர் சார்பில், காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், “ ஹெல்மெட் அணியாமல் இரு சக்கரவாகனத்தில் சென்ற இரு போலீசார்,  மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177 (ஹெல்மெட் அணியாத குற்றம்)த்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் மீது போலீஸ் சட்டம் 1955 என் 3(a)வின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போன்ற நடவடிக்கை, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து போலீஸ் அதிகாரிகள் மேலும் எடுக்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் செய்வதை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து பதிந்தாலும் அந்தப் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து போலீசார் இது போல நடவடிக்கை அறிக்கைகளை அந்தந்த பகுதியில் உள்ள டி சி க்கு காவல்துறை நடவடிக்கைகளுக்காக உடனுக்குடன் அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான நடவடிக்கைதான்.

அதே நேரம், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம், நான்கு சக்கர வானத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடக்கூடாது என்பதே பொதுமக்களின் கோரிக்கை.