சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்டத்திட்டம் நிறைவேற்றப்படும்  என உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் நேரு கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர், அன்று அவை மீண்டும் கூறியது. இன்றைய அமர்வில், கேள்வி நேரத்தை தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற துணைத்தலைவர்  ஆர்.பி. உதயகுமார் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை ஏற்க சபாநாயகர் மறுத்தார்.

இதையடுத்து,  சபாநாயகர்  தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே அ.திமு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது,  ”ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்டத்திட்டம்  திட்டம் குறித்து பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேளவி எழுப்பி பேசினார். அப்போருது,   தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவேற்ற அரசு ஆவண செய்யுமா என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  இந்த திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயிக்கா நிறுவனம் இந்த திட்டத்திற்கு ஜூன் 25-ம் தேதிக்குள் ஒப்புதல் அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2-ம் கட்ட திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்.