சென்னை:
பிளஸ் டூ தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணிவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.
இதுமட்டுமின்றி 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 73 சிறை கைதிகள் என மொத்தம் 8.60 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் அன்பில் மகேஷ்,  பிளஸ் டூ தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.